News March 28, 2024
கடலூர்: செல்போன் வெடித்து விபத்து

கடலூர் அடுத்த வழிசோதனைபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் நேற்று மாலை கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது தாய் மற்றும் பாட்டியுடன் பைக்கில் சென்றார். அப்போது புஷ்பராஜ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், மூவரும் நிலைகுலைந்து பைக்குடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News March 16, 2026
கடலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

வெங்கனூர் கைகாட்டி அருகே நேற்று இரவு வட மாநிலத்தை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ராமநாதன் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்துப் இறந்தவரின் விவரம் குறித்தும், விபத்து ஏற்படுத்தி வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 15, 2026
கடலூரில் நாளை நடக்க இருந்த குறைகேட்பு கூட்டம் ரத்து

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடக்க இருந்த குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News March 15, 2026
கடலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<


