News February 9, 2025
மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <
Similar News
News March 10, 2026
திருவள்ளூரில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
சித்தம்பாக்கம் ஏரியில் மண் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு!

திருவள்ளூர்: சித்தம்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏரி சுற்றுவட்டாரத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டால் நீர்நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் வளம் குறையும் என்றும் கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
News March 10, 2026
திருவள்ளூரில் வேண்டிய வரம் அருளும் அம்மன்!

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க


