News February 9, 2025

கட்சியை கலைத்து திமுகவில் இணையும் திருமா? Fact Check

image

விசிக தலைவர் திருமாவளவன் மார்ச் 1ம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல். திமுக கூட்டணியில் ஆணிவேர் போல் இருக்கும் திருமாவை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி போலியான செய்தியை சிலர் பரப்புவதாக கூறப்படுகிறது.

Similar News

News March 8, 2026

TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

image

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.

News March 8, 2026

விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

image

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

News March 8, 2026

பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

image

பெண்களின் ஆலோசனையை கேட்கும் ஆண்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் என்று ஆய்வு கூறுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கேளுங்க பாஸ்!

error: Content is protected !!