News February 9, 2025

தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் ₹80,000: வல்லுநர்கள்

image

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.63,560க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகமாக குவிவதால் விலை மேலும் உயரும் என்கின்றனர். நகைகளுக்கான தேவை அதிகரிப்பு, மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் 2025 இறுதிக்குள் சவரன் ₹80,000ஐ தொடும் என்றும் கணித்துள்ளனர்.

Similar News

News February 10, 2025

கிருஷ்ணகிரியில் நாய் கடித்து சிறுவன் பலி

image

கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான். நந்தீஷ் என்ற அச்சிறுவன் 5 நாள்களுக்கு முன்னர் பள்ளிக்கு செல்லும்போது நாய் கடித்துள்ளது. அதனை அவன் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளான். இன்று காலை சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லவே, அங்கு மருத்துவரிடம் நாய் கடித்ததைக் கூறியுள்ளான். பின்னர் சில மணி நேரங்களில் அவனது உயிர் பிரிந்தது.

News February 10, 2025

டெல்லியில் அதிமுக அலுவலகம் திறப்பு

image

டெல்லியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக இபிஎஸ் திறந்து வைத்துள்ளார். 13 ஆயிரத்து 20 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த கட்டடத்துக்கு ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்- புரட்சித் தலைவி அம்மா மாளிகை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News February 10, 2025

நடிகை கஸ்தூரி போனை ஹேக் செய்த மர்ம நபர்கள்

image

தனது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. அதனால், வேறு டிவைஸில் இருந்து இந்த தகவலை பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு சோஷியல் மீடியாவில் பலரும் ஆதரவாகவும், கிண்டல் செய்தும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

error: Content is protected !!