News February 9, 2025

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

image

கரூர் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை 10ம் தேதி முதல், 17 வரை நடக்கிறது. இதில், 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39,236 பேருக்கும், 20-30 வயதுடைய, 80,627 பெண்கள் (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

கரூர்: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் (19). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், டெக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார். அங்கு பணியாற்றிய 16 வயது சிறுமியுடன், கமலேஷூக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த பிப். 20ல் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று முன்தினம் கமலேஷை போக்சோவில் கைது செய்தனர்.

News March 11, 2026

கரூர்: ஆஸ்துமா நோயால் ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் மஞ்சமேடு பகுதியை சேர்ந்த 60 வயது சக்திவேல், மனைவி சிவபாக்கியத்துடன் கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தவர். குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் எடுத்துவரும் சக்திவேல், நேற்று சேங்கல் சந்தைப்பேட்டையில் மயங்கி விழுந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News March 11, 2026

கரூர்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

image

கரூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!