News February 9, 2025

டூ வீலர் மோதியதில் பழனி பாதயாத்திரை பக்தர் பலி

image

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியில் திருச்சி பாரதியார் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேல் மாத்தினிபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தை உடன் வந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News August 17, 2025

திண்டுக்கல்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 17, 2025

இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம் – தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான விண்ணப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து https://dsdcpimms.tn.gov.in தகுதிவாய்ந்த நபர்கள் பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15.09.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 17, 2025

திண்டுக்கல்: 10வது பாஸ் ரயில்வேயில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!