News February 9, 2025
திமுக நிர்வாகி எஸ்.கே.நவாப் நீக்கம்

கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைக்கப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 12, 2026
இனி டெலிகிராமில் புது படங்களை பார்க்க முடியாது..

OTT-க்கு பணமில்லை என்பதால் பெரும்பாலானோர் புது படங்களை டெலிகிராமில் பார்க்கின்றனர். இதனால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி ஜியோ சினிமா, அமேசான் பிரைம் நிறுவனங்கள் புகார் எழுப்பியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் படங்கள் பதிவேற்றும் 3,100 சேனல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்கள் கருத்து?
News March 12, 2026
தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 12, 2026
கேஸ் சிலிண்டர் பதுக்கல்.. TN-ல் முதல் முறையாக கைது!

கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு <<19343866>>அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை(ECA)<<>> அமல்படுத்தியது. அதன்படி, கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்தால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், TN-ல் முதல் முறையாக நெல்லையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17 சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாக்கிரதை!


