News March 28, 2024

238 முறை தோல்வி அடைந்த ‘தேர்தல் மன்னன்’

image

தமிழகத்தின் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன், மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை 238 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட அவர், அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் வெற்றி பெற வேண்டுமென்று போட்டியிடவில்லை. வெற்றி என்பது 2ஆம் பட்சம். ஆனால், என் கடைசி மூச்சு வரை போட்டியிட்டுக் கொண்டே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளாா்.

Similar News

News March 23, 2026

அரியலூர் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

image

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை ஒட்டி அனைவரும் 100% வாக்களிப்போம் என்பது குறித்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பதாகையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News March 23, 2026

BREAKING: துரந்தர் 2 படத்திற்கு தடையா?

image

‘துரந்தர் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், படத்தில் ஒரு சார்பான கருத்து உள்ளதாக சுட்டிக்காட்டி, படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கக் மனுவில் கோரப்பட்டுள்ளது. வெளியான 3 நாள்களில் ₹500 கோடியை வசூலித்த ‘துரந்தர் 2’ படம் பாகிஸ்தானில் உளவு பார்க்கும் இந்தியரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

News March 23, 2026

தங்கம் ₹5,000, வெள்ளி ₹15,000 இன்று விலை குறைந்தது

image

கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்திலிருந்த தங்கம், வெள்ளி விலை தற்போது சரசரவென சரிந்து வருகிறது. இன்று தங்கம் விலை <<19453216>>சவரனுக்கு ₹5,360<<>> குறைந்த நிலையில், வெள்ளியும் கிலோவுக்கு ₹15,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ₹235-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,35,000-க்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களில் இவற்றின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!