News February 9, 2025
ஜம்மு-காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி கைது!

ஜம்மு-காஷ்மீர் Ex CM மெஹபூபா முப்தியை கைது செய்த போலீசார் வீட்டுக் காவலில் அடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரமுல்லா செக்போஸ்ட்டில் லாரி டிரைவரை பாதுகாப்பு படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர். மேலும், கதுவாவில் போலீஸ் காவலிலிருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முப்தி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 11, 2026
விருதுநகர்: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News March 11, 2026
விஜய்யை பாஜக முடித்துவிடும்: கொங்கு ஈஸ்வரன்

நிதிஷ்குமாரைப் போல இந்த தேர்தலில் EPS-ஐயும், அடுத்த தேர்தலில் விஜய்யையும் பாஜக காலிசெய்துவிடும் என நினைத்ததாக ஈஸ்வரன் கூறியுள்ளார். NDA-ல் விஜய்யை இணைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்களை பற்றி பேசிய அவர், போகிற போக்கை பார்த்தால் வரும் தேர்தலிலேயே விஜய்யையும் பாஜக முடித்துவிடும் என தெரிகிறது என்றார். மேலும், இது மட்டும் நடந்தால் TN-ல் பாஜக காலூன்ற இவர்கள் உதவுவது தெரிந்துவிடும் என பேசியுள்ளார்.
News March 11, 2026
OPS ஆதரவாளர்கள் ஒன்றாக அதிமுகவில் இணைந்தனர்

OPS-ன் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் தீவிர ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரை அதிமுகவில் இணைக்க EPS தரப்பு திட்டமிட்டுள்ளது. OPS, திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.


