News February 9, 2025
கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு: புதுவை மீன்வளத் துறை

புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை மீனவர்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மீனவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News September 8, 2025
அமைச்சரை வாழ்த்தி அரசு கொறாடா!

இன்று (செப். 8, 2025) பிறந்தநாள் கொண்டாடும் உள்துறை அமைச்சர் அ. நமச்சிவாயத்துக்கு, புதுச்சேரி அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் (ஏ.கே.டி) நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கியும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News September 8, 2025
பொதுப்பணித்துறை அலுவலகத்தை எம்எல்ஏ முற்றுகை

உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நேரு எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள் இன்று (செப். 8) பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு பிரிவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
News September 8, 2025
புதுச்சேரியில் மழை மக்கள் மகிழ்ச்சி!

புதுச்சேரியில், கடந்த ஒரு வாரமாக கோடை காலம் போல, அனல் காற்றுடன் வெயில் அடித்தது. அதனால், கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.வெயில் காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.இந்நிலையில், தவளக்குப்பம் பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.