News February 9, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739068409440_1231-normal-WIFI.webp)
ஆஸி.யின் ஸ்மித் உலக கிரிக்கெட்டில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 11 வீரர்களுடன் பார்ட்னர்ஷிப்பில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர், ரிக்கி பாண்டிங் 10 பேருடன் 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். மேலும், ஆஸி. அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங்(41) சாதனையையும் ஸ்மித்(36) நெருங்கி வருகிறார்.
Similar News
News February 10, 2025
இரவில் நடுத்தெருவில் நின்ற பெண் ஊழியர்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739189431160_347-normal-WIFI.webp)
மைசூரு இன்போசிஸ் நிறுவனத்தில், 400 பயிற்சி ஊழியர்கள் திடீரென நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்.7-ம் தேதி மாலை 7 மணிக்கு, பெண் ஊழியர்களை உடனே ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். ‘இந்த நேரத்தில் எப்படி போவது, இன்றிரவு மட்டும் தங்கவிடுங்கள்’ என்று பெண்கள் கெஞ்சியும், ‘அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நீங்கள் இப்போது நிறுவன ஊழியர்கள் கிடையாது’ என்று கூறி விரட்டினார்களாம்.
News February 10, 2025
பள்ளியிலேயே மாணவி பலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_92022/1662720705137-normal-WIFI.webp)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக் கவனித்த ஆசிரியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவிகள் இதேபோல் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழந்தது ஏன் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2025
நாய்களுக்கு எல்லாம் குடும்பம் இருக்கக் கூடாதா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739185930505_1246-normal-WIFI.webp)
விபத்தில் துணையை இழந்த நாய் ஒன்று பிரிய மனதில்லாமல் கூடவே அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த நாயின் கண்களில் இருக்கும் ஏக்கமும் வருத்தமும் “எங்களுக்கு எல்லாம் குடும்பம் இருக்கக் கூடாதா?” என்று கேட்பது போல உள்ளது. விலங்குகள் ஐந்தறிவு ஜீவன்கள் என்று நாம் கூறினாலும் அன்பு, காதல் ஆகியவை அனைவருக்கும் ஒன்றே என்பதை இந்த போட்டோ உணர்த்துகிறது.