News February 9, 2025

புதுகை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 2 இடங்களில் அனுமதி

image

புதுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த காட்டுப்பட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மற்றும் இலுப்பூர் வட்டம் திருநல்லூரில் செவ்வாய்கிழமை (பிப்.11) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசுச்செயலர் சத்யபிரதசாகு நேற்று வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 9, 2025

புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுமடை SOC-யில் நேற்று அடையாளம் தெரியாத யாசகம் பெறும் நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து விராலிப்பட்டி சரக VAO அளித்த புகாரின் அடிப்படையில், கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News November 9, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கு தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (10.11.2025) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று (09.11.2025) மற்றும் நாளை (10.11.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.

News November 9, 2025

புதுகை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.08) இரவு 10 மணி முதல் இன்று (நவ.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!