News February 9, 2025

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது

image

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு முகநூலில் தினேஷ் என்ற ஜுனியர் மாணவர் பழக்கமானார். கடந்தாண்டு, தினேஷ் அவரது ஆபாச படத்தை அப்பெண்ணுக்கு அனுப்பி வீடியோ காலில் 3 முறை அழைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தினேஷை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம் (பிப்.7) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News August 23, 2025

சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 2/2

image

நீங்கள் பயந்தால் அதை நாய்களால் உணர முடியும். எனவே பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். நாய் உங்களை நோக்கி வந்தால் அதை திசை திருப்ப உங்கள் கையில் இருக்கும் பொருளை கீழே தூக்கி வீசலாம் அல்லது கீழே குனிந்து கல் எடுப்பது போல பாவனை செய்யலாம். பைக்கில் போனால் நாயை கண்டதும் வேகமாக முறுக்க கூடாது. முக்கியமாக நாய் மீது எதையும் தூக்கி வீச கூடாது. இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 1/1

image

சென்னையில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரும் விபத்திலிருந்து தற்காத்து கொள்ள சில வழி முறைகளை பின்பற்றலாம். முதலில் உங்கள் பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணிலோ இந்த <>இணையத்திலோ <<>>புகார் அளிக்கலாம். நாய்களை கண்டால் ஓடாமல் மெதுவாக நடந்து செல்ல வேண்டும். நாயை நேருக்கு நேர் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் நாய்க்கு பயம் ஏற்பட்டு நம்மை தாக்கும். <<17490802>>தொடர்ச்சி<<>> ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

சென்னை நாள் – புத்தக கண்காட்சி

image

சென்னை அசோக் நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று சென்னை நாள் புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் எழுத்தாளர்கள், ஊழியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் சென்னை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

error: Content is protected !!