News February 9, 2025

காலையில் எழுந்ததும் போனில் ரீல்ஸ் பாக்குறீங்களா?

image

காலையில் எழுந்தவுடன் போனில் ரீல்ஸ்களைப் பார்த்தால், Cortisol Hormone உச்சம் பெற்று, நாள் முழுவதும் மன அழுத்தம் பெறுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனைத் தவிர்த்து, சிறிது நேரம் வெயில் படும் இடத்தில் நிற்பதால், மன அழுத்தம் குறையும் என்றும் தெரிவிக்கிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் டிவி, போனில் மூழ்காமல், சிறிது தியானம், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் என அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News February 10, 2025

போருக்கு முற்றுப்புள்ளி? புடினுடன் டிரம்ப் பேச்சு

image

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியதாக USA அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். போரில் உயிர் பலி ஏற்படுவதை தான் விரும்பவில்லை என புடின் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். போரில் லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். இதற்கு மேலும் உயிர் பலி நிகழ்வதை புடின் தடுத்து நிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 10, 2025

ரேஷன் கடைகளில் வருகிறது நவீன தராசு

image

ரேஷன் கடைகளில் விரைவில் புதிய வகை தராசுகள் பயன்படுத்தப்பட உள்ளன. புளூடூத் (அ) USB கேபிளை பாயின்ட் ஆப் சேல் கருவியுடன் இணைத்து பயன்படுத்தும் வகையிலான புதிய எலக்ட்ரானிக் தராசுகள், அளவைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. அளவையாளர், தராசில் எவ்வளவு எடைக்கு பொருள் வைக்கிறாரோ அந்த எடையளவு உடனுக்குடன் ரசீதாக வழங்கப்படும். இதனால், ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும்.

News February 10, 2025

TN அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

image

CM ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் Dy CM, அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், TNல் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

error: Content is protected !!