News February 9, 2025
பாஜக, AAP இடையே வாக்கு வித்தியாசம் இவ்வளவு தானா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739059012313_785-normal-WIFI.webp)
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 2%க்கும் குறைவாகவே உள்ளது. பாஜக 45.56%, ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன. ஆனால், தொகுதி வாரியாக 26 இடங்கள் வித்தியாசம் உள்ளது. பாஜக 48 தொகுதிகளையும், AAP 22 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் 3 வேட்பாளர்களும் AAPஐ சேர்ந்தவர்கள் ஆவர்.
Similar News
News February 10, 2025
ODIல் அதிக சதம் அடித்த வீரர்கள் இவர்கள் தான்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739140539838_785-normal-WIFI.webp)
ODI கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி (50) முதலிடத்தில் நீடிக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (49) 2வது இடத்திலும், ரோகித் ஷர்மா (32) 3வது இடத்திலும் உள்ளனர். ரிக்கி பாண்டிங் (30), ஜெயசூர்யா (28), ஆம்லா (27), ஏபி டி வில்லியர்ஸ் (25), கிறிஸ் கெய்ல் (25) ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டாப்-3ல் உள்ள மூவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 10, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739122458354_785-normal-WIFI.webp)
✍சட்டப்பூர்வமாக சரியான சில விஷயங்கள், நியாய ரீதியாக பார்த்தால் சரியானவை அல்ல.✍எதிரிகளை அழிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான்.✍ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.✍உதவி செய்யும் இதயம் இருப்பவனுக்கே, விமர்சிக்க உரிமை உண்டு.✍எல்லோரையும் நம்புவது பயங்கரமானது; யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது.✍ ஏமாற்றுவதைக் காட்டிலும், தோற்றுப்போவது மரியாதைக்குரியது – ஆபிரகாம் லிங்கன்.
News February 10, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் PM மோடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739139344709_785-normal-WIFI.webp)
தேர்வு எழுத உள்ள மாணவர்களை PM மோடி நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் 8வது ஆண்டு நிகழ்ச்சி இந்தாண்டு 8 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது, கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட வகையில், 2,500 மாணவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.