News February 9, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! -புத்தர்

Similar News

News February 9, 2025

தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் ₹80,000: வல்லுநர்கள்

image

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.63,560க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகமாக குவிவதால் விலை மேலும் உயரும் என்கின்றனர். நகைகளுக்கான தேவை அதிகரிப்பு, மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் 2025 இறுதிக்குள் சவரன் ₹80,000ஐ தொடும் என்றும் கணித்துள்ளனர்.

News February 9, 2025

₹100 கோடி கிளப்பில் விடாமுயற்சி!

image

கடந்த 6ம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’ 3ம் நாளில் உலகளவில் ₹105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ₹100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் விடாமுயற்சி படைத்துள்ளது. ஆக்ஷன் மாஸ் ஹீரோவான அஜித்தை மாறுபட்ட கோணத்தில் காட்டிய மகிழ்திருமேனியின் படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா… படம் எப்படி இருக்கு?

News February 9, 2025

மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாகும் கோலி?

image

ரோஹித் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதால், BGT கடைசி போட்டியிலேயே களமிறங்கவில்லை. இதனால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் கோலியை கேப்டனாக்க தனது விருப்பத்தை கம்பீர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை. BGT முதல் டெஸ்டில் கேப்டனான பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை?

error: Content is protected !!