News February 9, 2025
2-3 மணி நேரம் மட்டுமே தூங்குவேன்: சல்மான் கான்
ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் மட்டுமே தான் தூங்குவதாக நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். படப்பிடிப்பு இடைவெளியின் போது சிறிது நேரம் தூங்குவேன் என்றும் விமானம் நடுங்கினாலும் நிம்மதியாக தூங்குவேன் எனவும், சிறையில் இருக்கும் போது தூக்கத்திற்கே அதிகநேரம் செலவிட்டதாகவும் தெரிவித்தார். அவர் மாதத்திற்கு 2-3 முறை மட்டுமே 7-8 மணி நேரம் தூங்குவார் என்று அவரது இளைய சகோதரரின் மகன் அர்ஹான் கான் கூறியிருந்தார்.
Similar News
News February 9, 2025
இறைச்சி வாங்க கிளம்பிட்டீங்களா?
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலரது வீடுகளில் இறைச்சி இல்லாமல், அன்றைய நாள் கழியாது. ஆனால், நாளை மறுநாள் தைபூசம் வருவதால், இறைச்சியின் நுகர்வு குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ₹93, முட்டை கோழி கிலோ ₹77ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், மீன்களின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ சீலா மீன் ₹700, விளை மீன், ஊளி, பாறை மீன்கள் ₹400, தோல்பாறை ₹200, சூரை மீன் ₹180க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
News February 9, 2025
சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி!
‘STR 49’ படத்தில் பெரிய காம்போ ரெடியாகி வருகிறது. காலேஜ் கதைக்களமான இதில், சிம்புவுடன் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள், ‘ஆஹா…இது யாருமே எதிர்பார்க்காத காம்போ ஆச்சே’ என குஷியில் இருக்கிறார்கள். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்க உள்ளார். சாய்பல்லவி – சிம்பு காம்போ எப்படி இருக்கும்?
News February 9, 2025
ஜம்மு-காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி கைது!
ஜம்மு-காஷ்மீர் Ex CM மெஹபூபா முப்தியை கைது செய்த போலீசார் வீட்டுக் காவலில் அடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரமுல்லா செக்போஸ்ட்டில் லாரி டிரைவரை பாதுகாப்பு படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர். மேலும், கதுவாவில் போலீஸ் காவலிலிருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முப்தி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.