News March 28, 2024
ஐபிஎல்லில் அதிவேக அரை சதம் அடித்த வீரர்கள்

▶யஷ்வி ஜெய்ஸ்வால் – 13 பந்துகளில், ▶பேட் கம்மின்ஸ் – 14 பந்துகளில், ▶கே.எல்.ராகுல் – 14 பந்துகளில், ▶சுனில் நரேன் – 15 பந்துகளில், ▶யூசுப் பதான் – 15 பந்துகளில், ▶நிகோலஸ் பூரன் – 15 பந்துகளில், ▶சுரேஷ் ரெய்னா – 16 பந்துகளில், ▶கிறிஸ் கெயில் – 17 பந்துகளில், ▶ஆடம் கில்கிறிஸ்ட் – 17 பந்துகளில், ▶கிறிஸ் மோரிஸ் – 17 பந்துகளில், ▶கீரன் பொல்லார்ட் – 17 பந்துகளில் அடித்துள்ளனர்.
Similar News
News March 18, 2026
BREAKING: கூட்டணி.. கடைசி நேரத்தில் மாற்றம்

ராமதாஸ் தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய MLA அருள், கூட்டணி குறித்து தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி காலம்தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் இறுதி நேரத்தில் கூட்டணி கணக்குகள் மாறலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 18, 2026
தேமுதிகவுக்கு 7 சீட் ஒதுக்கீடு?

வரும் 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார உத்திகள் & தேமுதிகவின் தேர்தல் அறிக்கை குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாள்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News March 18, 2026
₹500 நோட்டுகள்.. புதிய உத்தரவு வெளியானது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளைத் தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


