News February 9, 2025

நீங்கள் தனியாக வாழ்கிறீர்களா?

image

நாள்பட்ட தனிமை உடல், மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், ஆரோக்கியத்தில் கடும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தனிமையில் இருந்தால் இறப்பு ஆபத்து 29% அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதை விட ஆபத்து அதிகம். இதய நோய், பக்கவாதம், நினைவாற்றல் இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். தனிமையால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து, கவலை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றன.

Similar News

News February 9, 2025

பாஜக, AAP இடையே வாக்கு வித்தியாசம் இவ்வளவு தானா?

image

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 2%க்கும் குறைவாகவே உள்ளது. பாஜக 45.56%, ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன. ஆனால், தொகுதி வாரியாக 26 இடங்கள் வித்தியாசம் உள்ளது. பாஜக 48 தொகுதிகளையும், AAP 22 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் 3 வேட்பாளர்களும் AAPஐ சேர்ந்தவர்கள் ஆவர்.

News February 9, 2025

கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் கோடி கடன் இலக்கு

image

கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் ₹1 லட்சம் கோடி கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நகைக்கடன், பயிர்க்கடன் என ₹85,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. தொடர்ந்து, மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 9, 2025

+2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

image

+1, +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!