News February 8, 2025
பட்ஜெட்டை வைத்து டெல்லியை பிடித்த பாஜக
டெல்லி தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கும் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் கடந்த வாரம் வெளியான பட்ஜெட் அறிவிப்பு தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதிகமான அரசு ஊழியர்கள் உள்ள டெல்லியில் 67.16% மக்கள் மிடில் கிளாஸ் வகுப்பினர். வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்ட அறிவிப்பானது, மிடில் கிளாஸ் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாஜக பக்கம் திருப்பியதாக சொல்கின்றனர்.
Similar News
News February 9, 2025
2026ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை
தலைநகரிலேயே தாமரை மலரும்போது, தமிழகத்திலும் 2026ல் தாமரை மலரும் என தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றதாக விமர்சித்தார். மேலும், INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு திமுக கவலைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
News February 9, 2025
2-3 மணி நேரம் மட்டுமே தூங்குவேன்: சல்மான் கான்
ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் மட்டுமே தான் தூங்குவதாக நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். படப்பிடிப்பு இடைவெளியின் போது சிறிது நேரம் தூங்குவேன் என்றும் விமானம் நடுங்கினாலும் நிம்மதியாக தூங்குவேன் எனவும், சிறையில் இருக்கும் போது தூக்கத்திற்கே அதிகநேரம் செலவிட்டதாகவும் தெரிவித்தார். அவர் மாதத்திற்கு 2-3 முறை மட்டுமே 7-8 மணி நேரம் தூங்குவார் என்று அவரது இளைய சகோதரரின் மகன் அர்ஹான் கான் கூறியிருந்தார்.
News February 9, 2025
உங்கள் ஃபோன் ஸ்கிரீன் நேரத்தை இப்படி குறைக்கலாம்!
* தேவையற்ற செயலிகளின் நோட்டிஃபிகேஷன்களை முடக்கவும்.
* 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஸ்கிரீன் பிரேக் எடுக்கவும். வாரத்தில் ஒரு நாள் உங்கள் போனைப் பயன்படுத்தாதீர்கள்.
* போனை பாத்ரூம் (அ) பெட்ரூமுக்குள் கொண்டு செல்ல வேண்டாம்
* போன் உபயோகத்தை குறைக்கிறீர்கள் என்று உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். குறுஞ்செய்திகளுக்கு தாமதமாக பதில் அனுப்பினாலும் பரவாயில்லை.