News February 8, 2025

ஆண்களே, இந்த 7 அறிகுறிகளை கவனிங்க!

image

இதயநோய் மரணங்களில் 85% மாரடைப்பு, ஸ்ட்ரோக் பாதிப்பால் நேர்கிறது. அதன் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்தால் ஆபத்தை தடுக்கலாம். அவை: *நெஞ்சு வலி / அசவுகரியம்: ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. வலியோ, இறுக்கமோ சில நிமிடங்கள் தாக்கலாம். தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை வரை பரவலாம் *மூச்சுத்திணறல் *உடலின் மேல்பாதியில் வலி *திடீரென அதிகப்படியான வியர்வை *குமட்டல்/ வாந்தி *தலைச்சுற்றல் *அசாதாரண சோர்வு.

Similar News

News February 9, 2025

+2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

image

+1, +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News February 9, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! -புத்தர்

News February 9, 2025

2026ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

image

தலைநகரிலேயே தாமரை மலரும்போது, தமிழகத்திலும் 2026ல் தாமரை மலரும் என தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றதாக விமர்சித்தார். மேலும், INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு திமுக கவலைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!