News February 8, 2025

டெல்லி முடிவு INDIA அணிக்கான எச்சரிக்கை: பொன்முடி

image

டெல்லி தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற பாடத்தை தேர்தல் முடிவு கூறுவதாகவும், INDIA கூட்டணி தலைவர்களை அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 4 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள மதிப்பெண் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! -புத்தர்

News February 9, 2025

2026ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

image

தலைநகரிலேயே தாமரை மலரும்போது, தமிழகத்திலும் 2026ல் தாமரை மலரும் என தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றதாக விமர்சித்தார். மேலும், INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு திமுக கவலைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News February 9, 2025

2-3 மணி நேரம் மட்டுமே தூங்குவேன்: சல்மான் கான்

image

ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் மட்டுமே தான் தூங்குவதாக நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். படப்பிடிப்பு இடைவெளியின் போது சிறிது நேரம் தூங்குவேன் என்றும் விமானம் நடுங்கினாலும் நிம்மதியாக தூங்குவேன் எனவும், சிறையில் இருக்கும் போது தூக்கத்திற்கே அதிகநேரம் செலவிட்டதாகவும் தெரிவித்தார். அவர் மாதத்திற்கு 2-3 முறை மட்டுமே 7-8 மணி நேரம் தூங்குவார் என்று அவரது இளைய சகோதரரின் மகன் அர்ஹான் கான் கூறியிருந்தார்.

error: Content is protected !!