News February 8, 2025
உங்கள் மூளையை பாதிக்கும் தவறான 7 பழக்கங்கள்

உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சிகள் மூலம் அதை ஆரோக்கியமாக வைக்கலாம். ஆனால், பின்வரும் பழக்கங்கள் மூளையை சேதப்படுத்தி அதன் வேலைகளை பாதிக்கும். அவை: *நாட்பட்ட மன அழுத்தம் *போதுமான தூக்கம் இல்லாதது *புகைப்பழக்கம் *அதிகம் இனிப்பு உட்கொள்வது *அதிக மதுப்பழக்கம் *உடலுழைப்பு இல்லாத லைஃப்ஸ்டைல். இவற்றை தவிர்த்தாலே, மூளை நன்றாக வேலை செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Similar News
News September 9, 2025
நுண்சிலை செய்த பொன்சிலையே அதுல்யா

காந்த கண்களால் கவர்ந்திழுக்கும் அதுல்யா ரவி, இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்களால் ரசிகர்கள் ‘நான் ஈ’ படத்தின் வீசும் வெளிச்சத்திலே பாடலை பாடத் தொடங்கியுள்ளனர். எந்த லுக்கிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் அதுல்யா உணர்த்துகிறார். நாடோடிகள் 2, கடாவர், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அவர், தற்போது டீசல் படத்தின் ரிலீசிற்காக காத்திருக்கிறார்.
News September 9, 2025
இந்தியாவில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செல்போன் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பது போல் அவை திருடப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் டெல்லியில் 8.38 லட்சம் போன்கள் திருடப்பட்டுள்ளன. செல்போன் திருட்டில் டெல்லிக்கு அடுத்து கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் செல்போனை தொலைத்த 100 பேரில் 2 பேருக்கு மட்டுமே அது திருப்பி கிடைத்துள்ளது.
News September 9, 2025
வாய் துர்நாற்ற பிரச்னையா? இதை ட்ரை பண்ணுங்க

வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமின்றி வயிற்றோடும் தொடர்புடைய ஒரு பிரச்சனை. அல்சர், நீரிழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காலையில் காபிக்கு பதில் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது இதற்கு நல்ல தீர்வாக அமையும். கிராம்பை நன்றாக பொடி செய்து காலை உணவுக்கு பின் விரல்களால் சிறிதளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.