News February 8, 2025

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை கட்டாயம் – ஆட்சியர் 

image

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என 2021ல் அரசாணை 363ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் யாரும் அணிவதில்லை.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 90 அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட 
 காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News August 16, 2025

சிவகங்கை: 1 இலட்சம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்கள் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 1 இலட்சமும், பதிவு சான்றிதழ் பெற்ற உணவு வணிகருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-243725.

News August 16, 2025

சிவகங்கை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

image

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <>*இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பித்து நீங்களும் மத்திய அரசு அதிகாரி ஆகுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!