News February 8, 2025
மனுநீதிச் சோழன் நினைவாக அமைக்கப்பட்ட கல்தேர்

திருவாரூர் என்றாலே நினைவுக்கு வருவது நீதிக்கு பேர்போன மனுநீதி சோழன். நீதிக்காக தன்னுடைய மகனையே தேரினால் ஏற்றி, நீதி தவறாமல் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டியவர் மனுநீதி சோழன். அவரது நினைவாக, பின்னர் வந்த சோழ மன்னனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கல்லால் ஆன தேர் திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட விளாகத்தில் அமைக்கப்பட்டது. SHARE NOW..
Similar News
News July 8, 2025
திருவாரூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. <
News July 8, 2025
உங்களுடன் முதல்வர் முகாம் விண்ணப்பம் வழங்கல்

திருவாரூர் நகர்ப் பகுதிக்கு உட்பட்ட மேலவடபோக்கித் தெருவில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமின் விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், இன்று (ஜூலை 8) மேலவடபோக்கி தெரு பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
News July 8, 2025
திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16989990>>(பாகம்-2)<<>>