News February 8, 2025

இருட்டுக் கடை அல்வாவின் வரலாறு

image

1900களில் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்ற நெல்லை சொக்கம்பட்டி ஜமீன், அங்கு அல்வா சாப்பிட்டுவிட்டு சுவையில் மயங்கி அந்த குடும்பத்தை நெல்லைக்கு அழைத்து வந்துவிட்டார். அக்குடும்பத்தைச் சேர்ந்த பிஜிலி சிங், 1940களில் நெல்லை இருட்டுக் கடையை நிறுவினார். அதன்பின், தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தினர் அதே பாரம்பரியத்துடன் கடையை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 9, 2025

காலையில் படிப்பது நல்லதா?

image

பொதுவாக தேர்வு காலங்களில் பிள்ளைகளை படி படி எனப் பெற்றோர்கள் தொல்லை செய்கின்றனர். பகலில் பள்ளி சென்று சோர்வுடன் வரும் பிள்ளைகள், இரவில் படிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி முயன்றாலும், தூக்கக் கலக்கத்தில் சரியாக ஏறாது. மாறாக காலை 5 மணிக்கு எழுந்து படித்தால், மூளை மிகச் சுறுசுறுப்பாக இருக்கும். பாடங்கள் மனத்தில் நன்கு பதிவதுடன், நினைவாற்றலும் அபாரமாக வேலை செய்யும். பெற்றோர்கள் இதை செய்யலாமே.

News February 9, 2025

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் தேர்தல் வெற்றி: CM பெருமிதம்

image

மகத்தான திட்டங்களை தரும் திமுக அரசுக்கு, ஈரோடு (கி) மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடியதாக சாடிய அவர், அதிமுக மக்கள் மனதில் இருந்து மறைந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், வாக்களித்த மக்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம் என்றும் கூறினார்.

News February 9, 2025

Airtel, BSNL, Vi பயனர்களுக்கு: ரீசார்ஜ் பண்ணாமலே பேசலாம்

image

சில நேரங்களில் உங்களால் ரீசார்ஜ் பண்ண முடியாமல் போகலாம். அதனால் மொபைலில் கால் பண்ண முடியாத நிலை ஏற்படலாம். இதற்காக கவலை வேண்டாம். இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் WiFi calling அம்சம் உள்ளது. உங்கள் செட்டிங்ஸ் சென்று இதை ஆக்டிவேட் செய்துகொண்டால், ரீசார்ஜ் செய்யாத நிலையிலும், சிக்னல் மோசமாக இருந்தாலோ WiFi calling மூலம் ப்ரீயாக பேசலாம். ஆனால், உங்கள் வீட்டில் WiFi இருக்க வேண்டியது அவசியம்.

error: Content is protected !!