News February 8, 2025
விருதுநகரில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம்

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் மகப்பேறு இறப்பு, குழந்தை இறப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு ஆட்சியர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை கண்காணிக்கப்படுகின்றனர். மகப்பேறு தொடர்பாக சந்தேகங்களுக்கு 93454 92726, 93454 97705 இல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 28, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறப்பதில் சிக்கல்

சிவகாசி பகுதியில் அக்.31 அன்று பட்டாசு ஆலைகளை திறந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தியை தொடங்க சிலர் முடிவு செய்துள்ளனர். சில பட்டாசு ஆலைகள் பிரதோஷமான நவ.3 அன்று சிறப்பு பூஜையுடன் உற்பத்தியை தொடங்க உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பட்டாசு ஆலைகளை விரைவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
News October 28, 2025
சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 28, 2025
விருதுநகர்: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை.,

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <


