News March 28, 2024
குரூப் 1 தேர்வு: தேதி அறிவித்த TNPSC

90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி, துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்.27 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <
Similar News
News February 7, 2026
அதிமுக-பாஜக கூட்டணிக்கு OPS, சசிகலா ஆதரவு: தினகரன்

OPS மற்றும் சசிகலா தனி பாதையில் செல்லமாட்டார்கள் என TTV தினகரன் உறுதியாக கூறியுள்ளார். அவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதகமும் ஏற்படாது என்ற அவர், அதிமுக-பாஜக வெற்றிக்காக அவர்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். EPS-ன் எதிர்ப்பால் OPS-ம், சசிகலாவும் NDA-வில் இணைய வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட நிலையில், TTV இப்படி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்படுத்தியுள்ளது.
News February 7, 2026
Epstein Files-ல் சிக்கிய பிரபல இந்திய இயக்குநர் இவரா?

உலகம் முழுவதையும் உலுக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில், ‘Bollywood Guy’ என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இது பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தான் என பலரும் கூறிவந்த நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் நான் சென்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பீஜிங்கிற்கு தான் இதுவரை சென்றதே இல்லை எனவும், எனவே இதுபோன்ற விஷயங்களை நம்பவேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News February 7, 2026
மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்குகிறாரா ராமதாஸ்?

தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மனைவி செளமியாவை களமிறக்க அன்புமணி திட்டமிட்டுள்ளாராம். இதனால், அதே தொகுதியில் மகள் காந்திமதியை இறக்க ராமதாஸ் காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் மருமகள் vs மகள் போட்டி அனல் பறக்கும் என தைலாபுர வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


