News March 28, 2024
கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்

தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் சத்தமில்லாமல் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளன. வழக்கமாக சாதாரண இருக்கை வசதி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு ரூ.700 முதல் ரூ.1,000 வரை கட்டணம் பெறப்படும். ஆனால் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் அதிகம் செல்வதை பயன்படுத்தி ரூ.5,000ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
தி.மலையில் தீபம் ஏற்ற உரிமை இவர்களுக்கு மட்டுமே உரிமை!

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மலை உச்சியில் தீபம் ஏற்ற பர்வத ராஜகுலத்தினருக்கு (மீனவர்) உள்ள உரிமையாகும். இது, பண்டைய காலத்தில் சிவன் படையினராக இருந்த செம்படவர் சமூகத்தின் வழித்தோன்றல்களாக இவர்களை கருதுவதனால் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 3, 2025
விஜய்க்கு காங்., திடீர் ஆதரவு..

பிற அரசியல் கட்சிகள், கூட்டத்தை கூட்ட பணம் உள்ளிட்டவற்றை செலவிடும் நேரத்தில், தவெகவுக்கு கூட்டத்தை குறைப்பதே சவாலாக உள்ளது என காங்., முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இன்று திமுகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையிலான இப்பதிவு, சீட் பேரத்தை அதிகரிப்பதற்காகவே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 3, 2025
₹500 கோடி இல்லனா படம் ஃப்ளாப் தான்!

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் படம் பெரிய விலைக்கு விற்பனையாகி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ₹500 கோடியை கடந்தால் மட்டும் ஹிட் ஸ்டேட்டஸை அடைய முடியும். இதில் தமிழ்நாட்டில் ₹225 கோடியையும், வெளிநாடுகளில் ₹215 கோடியையும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இவ்வளோ பெரிய வசூலை அள்ளி, வெற்றி படமாக அமையுமா ‘ஜனநாயகன்’?


