News February 8, 2025
தனியார் பேருந்து விபத்து: ஓட்டுநர் உரிமம் ரத்து

திருப்பூர், செங்கப்பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், லாரியை வலது புறம் முந்த முயன்ற போது இந்த விபத்து நடந்ததாகவும், மேலும் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
குண்டு வெடிப்பில் 13 பேர் பலி: திருப்பூரில் சோதனை

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
திருப்பூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ஊத்துக்குளி சப்பட்டை நாயகன் பாளையம் சமுதாய நல கூட்டத்திலும், உடுமலை வட்டாரம் மலையாண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.


