News February 8, 2025

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிப்.10 அன்று குடற்புழு நீக்கம் மாத்திரை (அல்பெண்டசோல்) இலவசமாக வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. விடுபட்டவர்களுக்கான Mop up Day வருகின்ற 17.02.2025 அன்றும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

அரசு பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). நேற்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து தேனி செல்வதற்காக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 20, 2025

சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அப்ளை செய்யலாம். LMV உரிமம் பெற்ற லைசன்ஸ் அவசியம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு Share செய்து உதவிடுங்கள்.

error: Content is protected !!