News March 28, 2024

அதிமுக அலுவலகம் திறப்பு

image

சிவகங்கை, திருப்பத்தூரில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பணிமனை என்ற அதிமுக அலுவலகம் மாவட்ட அவை தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர்தாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 4, 2025

ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்

image

சிவகங்கையில் 102 மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் ஏப்.5 ஆம் தேதி சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.சுகாதார ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி.,நர்சிங் ஜி.என்.எம்., ஏ.என்.எம்., இதில் ஏதாவது ஒரு டிகிரி முடிக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். விபரங்களுக்கு 044 – 28888060 / 89259 – 41977 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.வேலை தேடுவர்களுக்கு SHARE செய்யவும்.

News April 4, 2025

புதிய ரயிலுக்கு முன்பதிவு துவங்கியாச்சு பயன்படுத்துங்க

image

 தாம்பரம்-இராமேஸ்வரம் விரைவு வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த வண்டியில் தாம்பரம் முதல் சிவகங்கை வரையிலான முன்பதிவு கட்டணம்: படுக்கை வசதி இருக்கை – ரூ.290, மூன்றடுக்கு AC வசதி கொண்ட இருக்கை – ரூ.775 இரண்டடுக்கு AC வசதி கொண்ட இருக்கை – ரூ.1105  முன்பதிவில்லா பயணம் ரூ.160 நீங்களும் பயன்பெற்று உங்க நண்பருக்கு SHARE செய்து பயன்பெற வையுங்க.

News April 4, 2025

சிவகங்கையில் போலீசிடமே திருட்டு

image

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சுரேஷ்குமார் 40. இவர் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் பணி முடித்து தனது டூவீலரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே நிறுத்திவிட்டு காரைக்குடிக்கு ரயிலில் சென்றார். திரும்பி வந்தபோது இவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் 20க்கு மேற்பட்ட டூவீலர்கள் திருடு போய் உள்ளது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!