News February 7, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப். 07) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
BREAKING: திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவிற்கு புதிய பதவி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இன்று (ஆகஸ்ட்.09) அவருக்கு திமுக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்பொறுப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழங்கினார்.
News August 9, 2025
ராமநாதபுரம் வழுதூரில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 9, 2025
ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த் துறையில் 29 காலிப் பணியிடங்கள் உள்ளது.
▶️10 ஆம் வகுப்பு தேர்ச்சி
▶️சைக்கிள்/பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
▶️விண்ணப்பதாரர் அதே தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ தமிழில் எழுத/ படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️ செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும்.
▶️மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை
இந்த லிங்கில் விண்ணப்பம் <