News February 7, 2025
மரண தண்டனை கோரிய மனு தள்ளுபடி

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி மே.வங்க அரசு தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால், அதனை சிபிஐ தாக்கல் செய்ய அனுமதியளித்தும் உத்தரவிட்டுள்ளது. பயற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
கனரா வங்கியில் வேலை.. உடனே முந்துங்க

கனரா வங்கியில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கியின் மார்க்கெட்டிங், சேல்ஸ் பிரிவில் பணி செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கான வயது வரம்பு 20-30 வரை, கல்வித் தகுதி இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹22,000 வழங்கப்படும். இதற்கு https://www.canmoney.in/careers தளத்தில் விண்ணப்பியுங்கள்.
News September 9, 2025
தோனிக்கு புகழாரம் சூட்டிய ரிக்கி பாண்டிங்

தோனியின் தலைமைப் பண்பை ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார். டி-20 போட்டிகளில் அழுத்தம் காரணமாக சில கேப்டன்கள் டக்அவுட்டில் பயிற்சியாளர்களிடம் ஆலோசனை கேட்பதை நாம் பார்த்திருப்போம். உதாரணமாக கில்-நெஹ்ரா. ஆனால் தோனி அப்படி செய்து ஒரு போதும் பார்த்ததில்லை என பாண்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் போது டக்அவுட்டில் ஆலோசனை கேட்காத ஒரே கேப்டன் தோனி மட்டுமே என்று பாண்டிங் குறிப்பிட்டார்.
News September 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 9, ஆவணி 24 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை