News February 7, 2025
தினம் ஒருமுறை… தம்பதிகளுக்கு HAPPY NEWS!

உங்கள் அன்புக்கு உரியவரை காதலுடன் அணைத்தால் *இணையருடன் நெருக்கம் கூடும், பிணைப்பு வலுவாகும் *செரடோனின் ஹார்மோன் சுரப்பால் உற்சாகம் பிறக்கும் *உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் *அப்போது சுரக்கும் எண்டார்பின் ஹார்மோன் உடல்வலியை குறைத்து, ரிலாக்ஸ் செய்யும் *மனஅழுத்தம் தணியும். *மனச்சோர்வு நீங்கும் *இதயத்தை இதமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *கவலை, பதற்றம், மரணம் பற்றிய அச்சம் குறையும்.
Similar News
News September 7, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். அதன்பின், ஓரிரு நாள்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அப்டேட் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 7, 2025
வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க!

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஈ-செலான் அனுப்பி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், அதனால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் மூலம் mparivahan செயலி எனக் கூறப்படும், ஒரு APK ஃபைல் அனுப்பப்பட்டு மோசடி நடக்கிறதாம். பொதுமக்கள் கவனமாக இருக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. உங்களுக்கும் மோசடி மெசேஜ் வந்ததா?
News September 7, 2025
SCIENCE vs MYTH: கிரகணத்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அறிவியலின் படி *கிரகணத்தின் போது கர்ப்பிணி வெளியே செல்வதால், பிறக்கும் குழந்தைக்கு தழும்பு ஏற்படும் என்பது உண்மையல்ல *கிரகணத்தின்போது சமைப்பதாலோ, சாப்பிடுவதாலோ உணவு நஞ்சாகாது *சந்திர கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கலாம், எந்த பாதிப்பும் ஏற்படாது. *கிரகணத்தால் தண்ணீரோ, தாவரங்களோ அசுத்தமாகாது *கிரகணத்தின் போது குளிக்காமல் இருப்பது பாவம் என்பது மத நம்பிக்கையே தவிர, அறிவியல் அடிப்படையிலானது அல்ல.