News February 7, 2025

20,696 வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வர்த்தகச் சான்று

image

2024- 25ஆம் நிதியாண்டில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் 20,696 கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உரிய கட்டணம் செலுத்தி வர்த்தக உரிமத்தைப் பெற்றுள்ளன. இதன்மூலம் ரூ.97.89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உரிமம் பெறாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாக மனு செய்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தி, வணிக உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Similar News

News September 11, 2025

சேலம்: வங்கி வேலை வேண்டுமா? APPLY NOW!

image

சேலம் மக்களே, மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 349 (Deputy General Manager, Assistant General Manager, Chief Manager, Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 11, 2025

சேலம் 1 லட்சத்தை கடந்த உரிமைத்தொகை மனுக்கள்!

image

கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் சேலத்தில் துவங்கியது. இந்த முகாமில் அனைத்து விதமான குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. அதன்படி, நேற்று வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1,01,726 மனுக்கள் குவிந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

சேலம்: தமிழ் கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ்!

image

சேலம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ் அருமை பெருமைகளையும், அதன் தொன்மையும், எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

error: Content is protected !!