News March 28, 2024
வாரத்தின் 7 நாட்களும் மோடி தமிழ்நாட்டில் இருக்கிறார்

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வாரத்தின் 7 நாட்களும் மோடி தமிழகத்தில் இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் மழை பாதிப்பு வந்த போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வர மறந்த மோடி, தேர்தல் வந்ததும் வருகிறார். பாஜகவுக்கு தேர்தலில் வாக்கு கிடைத்தால் மட்டும் போதும். தமிழக மக்களின் நலன்களில் அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை” என விமர்சித்தார்.
Similar News
News January 5, 2026
நெல்லை: கோவில் பூட்டை உடைத்து.. மர்மநபர்கள் கைவரிசை

நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே துவரம்பாடு பகுதியில் உள்ள மூணால் இசக்கியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், உண்டியலில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் தங்கத் தாலியை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 5, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்

குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். இந்நிலையில், இந்த விருந்தை புறக்கணிப்பதாக TN காங்., அறிவித்துள்ளது. TN மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், TN மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் கண்ணன் பட்டாம்பி(62) கிட்னி செயலிழப்பு காரணமாக காலமானார். மலையாள திரையுலகில் மெகா பட்ஜெட் படங்கள் சிலவற்றின் Production Controller-ஆக பணியாற்றியுள்ள இவர், புலிமுருகன், ஒடியன், 12th Man போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான ‘அரண்’ பட இயக்குநர் மேஜர் ரவியின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


