News February 7, 2025
1.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டது. மேலும் 2025 ஜனவரி 5ல் முடிக்க திட்டமிடப்பட்டு விடுபட்ட கால்நடைகளுக்கு செலுத்துவதற்காக 21 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பு ஊசி 1,75,773 கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும்.
Similar News
News August 28, 2025
விருதுநகரில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 36 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் http://vnrdrb.net என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News August 28, 2025
வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு

வெம்பக்கோட்டை அருகே கீழகோதை நாச்சியார்புரம் காட்டு பகுதியில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 20 கிலோ சோர்சா வெடிகள் மற்றும் 30 குரோஸ் கருந்திரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
News August 27, 2025
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.