News February 7, 2025

விருதுநகரில் தாய்ப்பால் கொடுத்த குழந்தை உயிரிழப்பு

image

அல்லம்பட்டியை சேர்ந்த முனீசுவரியின்(27) 3 மாத குழந்தை ஹரிஹரசுதன் இரவில் அழுததாகவும், உடனே முனீசுவரி தாய்ப்பால் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் காலையில் பார்த்த போது குழந்தை அசைவற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News

News October 28, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபாலா. இவருக்கும் இவரது மனைவி பொன்லட்சுமிக்கும் அடிக்கடி சண்டை வந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்லட்சுமி வேலை பார்க்கும் கடைக்கு சென்று சேதுபாலா வீட்டிற்கு அழைத்து வந்து வேலைக்கு செல்லக்கூடாது என்று சண்டை போட்டு பொன்லட்சுமி அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில் சேதுபாலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News October 28, 2025

சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 28, 2025

சிவகாசி மேம்பாலத்தை திறக்க கெடு விதித்த கம்யூனிஸ்ட்

image

சிவகாசி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவுபெற்றும் திறக்கப்படாமல் காலதாமதப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேம்பால பணிகளால் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் மேம்பாலத்தை திறக்காவிட்டால் மக்களை திரட்டி மேம்பாலத்தை திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!