News February 7, 2025
ஆளுநர் முட்டுக் கட்டையாக இருக்கக்கூடாது: உச்சநீதிமன்றம்

மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கை 3வது நாளாக விசாரித்து வரும் நீதிமன்றம், மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தால் அதற்கான காரணம் மாநில அரசுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியது. அத்துடன், மசோதாவை நிறுத்தி வைப்பது குறித்து அரசியல் சாசனம் எதுவும் கூறவில்லை என்றது.
Similar News
News September 8, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.
News September 8, 2025
FLASH: 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக இன்று(செப்.8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நேற்று, ராணிப்பேட்டை, ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஆலங்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே செல்வோர் குடையை மறக்காம எடுத்துட்டு போங்க.
News September 8, 2025
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலிகை தேநீர்!

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மயிர்க்கால்களைத் தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும், இது DHT ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
✦உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை, நீரில் போட்டு 5- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
✦இதனை வடிகட்டி, சாறை பிழிந்து, தேன் கலந்து சூடாகவோ, ஆற வைத்தோ குடிக்கலாம். SHARE IT.