News February 7, 2025
உடனடி கடன் செயலி மூலம் பல கோடி மோசடி – வாலிபர் கைது

உடனடி கடன் செயலி மூலமாக, பொது மக்களுக்கு கடன் கொடுத்து, கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி ரூ.465 கோடி மேல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News September 10, 2025
புதுவை: அடுத்தவரின் மனைவியை கடத்தி மறுமணம்?

புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பத்தை சேர்ந்த ஒருவரின் மனைவி தனது ஒரு வயது குழந்தையுடன் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது கணவர் விசாரிக்கையில் அதே பகுதியில் ஒருவர் தனது மனைவியை கடத்தி 2-வது திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் குழந்தையையும் மீட்டுத்தரக் கோரி கணவர் அளித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News September 10, 2025
புதுச்சேரி: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

புதுவை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 10, 2025
புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கத் தலைவர் ரகு என்கின்ற ரகுநாதன் தலைமையில் ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளிக்க நேற்று வந்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியதால் ஆட்சியில் இயக்கத்தை புறக்கணிப்பதாக கூறி இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.