News February 7, 2025
விருதுநகர் : சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபாலா. இவருக்கும் இவரது மனைவி பொன்லட்சுமிக்கும் அடிக்கடி சண்டை வந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்லட்சுமி வேலை பார்க்கும் கடைக்கு சென்று சேதுபாலா வீட்டிற்கு அழைத்து வந்து வேலைக்கு செல்லக்கூடாது என்று சண்டை போட்டு பொன்லட்சுமி அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில் சேதுபாலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News October 28, 2025
சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 28, 2025
சிவகாசி மேம்பாலத்தை திறக்க கெடு விதித்த கம்யூனிஸ்ட்

சிவகாசி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவுபெற்றும் திறக்கப்படாமல் காலதாமதப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேம்பால பணிகளால் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் மேம்பாலத்தை திறக்காவிட்டால் மக்களை திரட்டி மேம்பாலத்தை திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


