News March 28, 2024

தஞ்சையில் கோலம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதியில் மாநகராட்சி சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நேர்மையாக 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டி இன்று(மார்ச் 28) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதில் பெண்கள் ஆர்வமுடன் கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News February 11, 2026

பேராசிரியர்களுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிப்பு

image

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர்கள் இன்று வகுப்பறை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், UGC நிர்ணயித்த ரூ.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

News February 11, 2026

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை

image

எங்களது தொழிற்சங்கம் போராடி கொண்டிருப்பதால் தற்போது மாதாந்திர சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஜனவரி மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2026

தஞ்சாவூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

தஞ்சாவூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!