News March 28, 2024
தருமபுரி: லாரி மோதி 2 பேர் பலி

தருமபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த செல்லியம்பட்டி பகுதியில் நேற்று(மார்ச் 27) மாலை லாரி மற்றும் டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சேலத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில், டெம்போ மேல் லாரி ஏறியதில் டெம்போ டிரைவர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News August 10, 2025
தருமபுரி மாவட்டத்தில் 23.380 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு

தருமபுரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், கஞ்சா தொடர்பாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 93.432 கிலோ கஞ்சா, ஒரு கார், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 23.380 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.
News August 10, 2025
இந்தியாவில் காசிக்கு அடுத்து தருமபுரியில் தான்!

தருமபுரி, அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இந்தியாவில் காசிக்கு அடுத்து, தென் இந்தியாவில் காலபைரவருக்கென்று அமைந்துள்ள ஒரே தனிக்கோயில் இதுதான். அதியமான் மன்னன் போருக்குச் செல்லும் முன் தன் வாளை வைத்து இங்கு வழிபட்டதால், இன்றும் பைரவரின் திருக்கரங்களில் திரிசூலத்துடன் சேர்ந்து வாளும் இருப்பதைக் காணலாம். எதிரிகளின் தொல்லைகள் நீங்க, தடைகள் விலக இங்கே வழிபடலாம். ஷேர் பண்ணுங்க!
News August 10, 2025
புதுமைப் பெண் திட்டத்தின் 33,663 மாணவர்கள் பயன்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 22,087 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 11,576 மாணவர்களும் என மொத்தம் 33,663 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார். 2025-2026-ஆம் கல்வியாண்டில் மட்டும் 76 கல்லூரிகளில் 11,554 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.