News March 28, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பாதுகாப்பில் காவல்துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கடலூர், சப்-ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04142-220732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

கடலூர் மாவட்டத்தில் குடிமை பணிகள் தேர்வு, ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள், 08.02.2026 அன்று இருவேளைகளிலும்கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

கடலூர்: தட்டித் தூக்கிய போலிசார்

image

வேப்பூர் அடுத்த பெரியநெசலூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (47). இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரை வேப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சென்று பார்த்தபோது அந்த காரை யாரோ மர்ம நபர் கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து காரை கடத்திய சேலம் மாவட்டம், புளியங்குறிச்சியை சேர்ந்த தமிழ் செல்வன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News February 5, 2026

வெளிநாட்டவர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்- எஸ் பி

image

கடலூர் மாவட்டத்தில்
ஹோட்டல், வீடு, மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளி நாட்டவர்கள், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்தோர் குறித்த தகவலை தெறிக்க தெரிவிக்க வேண்டும்.
எஸ்பி அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீறுவோர் மீது வெளிநாட்டவர் சட்டம் 1946 பிரிவு 14 (சி) படி நடவடிக்கை எடுக்கப்படும் .

error: Content is protected !!