News March 28, 2024
அமலாக்கத்துறையின் அடுத்த இலக்கு பினராயி விஜயன் மகள்?

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், E.D.யின் அடுத்த இலக்காக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால், கவிதா மீது வழக்குப்பதிவு செய்து E.D. கைது செய்தது. இதையடுத்து கொச்சினை சேர்ந்த கனிமநிறுவனத்திடம், சட்டவிரோதமாக ரூ.1.72 கோடி பெற்றதாக வீணா விஜயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் E.D.யின் அடுத்த இலக்கு அவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News January 15, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021-ல் DMK ஆட்சிக்கு வந்ததும் ₹6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிலுவை விவரங்களை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
News January 15, 2026
SC-ன் அதிரடி உத்தரவால் மம்தாவுக்கு பின்னடைவு

<<18797106>>IPAC<<>> சோதனையை தொடர்ந்து ED அதிகாரிகள் மீது மே.வங்க போலீசார் பதிவு செய்த FIR-களுக்கு SC இடைக்கால தடை விதித்துள்ளது. மம்தா பானர்ஜி மீது ED தொடர்ந்த <<18864222>>வழக்கு<<>> விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சோதனையின்போது எடுக்கப்பட்ட CCTV காட்சிகளை பத்திரமாக பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மே.வங்க அரசு 3 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
News January 15, 2026
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாள்களை வெற்றிகரமாக கடந்து டாப் 4-ல் திவ்யா, அரோரா, சபரி, விக்ரம் உள்ளனர். டைட்டில் வின்னரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் திவ்யா முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2-வது இடத்தில் சபரியும், 3-வது இடத்திற்கான போட்டியில் விக்ரம், அரோரா இடையே இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. யார் டைட்டில் வின்னர் ஆக வேண்டும்? கமெண்ட்ல சொல்லுங்க


