News March 28, 2024
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் அடுத்த குருவிநாயனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை முதலே பல்வேறு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில் காந்திமதி மகளிர் சமூக நல அலுவலர் கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்துவருகின்றார். மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இப்பகுதி ஆந்திர எல்லையோர பகுதியாகும்.
Similar News
News April 10, 2025
கிருஷ்ணகிரி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343239400 ▶️கிருஷ்ணகிரி மாநாகராட்சி ஆணையர் 04344-247666 ▶️ கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையம் 9445086362 ▶️ மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் 6374714242 ▶️கிருஷ்ணகிரி போக்குவரத்து துறை 04343230214 ▶️ கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் 04343236396 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 10, 2025
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற 10ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படித்த இளைஞர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மே 31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.