News February 6, 2025
விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில், டிரோன் மகளிர் திட்டத்தில், கேத்தனூர் கிராமப் பஞ்சாயத்தில் மனோரஞ்சிதம் அவரது செல்போன் எண் 9566615556 மற்றும் குண்டடம் வட்டாரம் சங்கரண்டாம்பாளையம் சரண்யா அவரது செல்போன் எண் 6369124725 என்பவருக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவர் கைபேசி செயலி மூலமாக டிரோன் மகளிரை நேரடியாகத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகள் அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் 3 சிறந்த பள்ளிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாராபுரம் வட்டம் காரத்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.
News November 11, 2025
குண்டு வெடிப்பில் 13 பேர் பலி: திருப்பூரில் சோதனை

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
திருப்பூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ஊத்துக்குளி சப்பட்டை நாயகன் பாளையம் சமுதாய நல கூட்டத்திலும், உடுமலை வட்டாரம் மலையாண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.


