News March 28, 2024

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை

image

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசிய அவர், “பாஜகவை ஆதரிப்பவர்களுக்கு ஒருநிலைபாட்டையும், எதிர்ப்பவர்களுக்கு ஒரு நிலையையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதற்கு எல்லாம் விசிக பயப்படாது. நமக்கு பானை சின்னம் நிச்சயம் கிடைக்கும். இந்த தேர்தலுடன் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம்” எனக் கூறினார்.

Similar News

News January 13, 2026

16 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

News January 13, 2026

விஜய் ரசிகர்களை எச்சரித்த ‘பராசக்தி’ தயாரிப்பாளர்

image

‘பராசக்தி’ படம் குறித்து விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ரிலீசான ஒரு படத்திற்கும் இதேபோன்று அவர்கள் செய்தனர். உங்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் நாங்களா தடுத்தோம்? நாங்கள் தான் ரிலீஸ் தேதி முதலில் அறிவித்தோம். விஜய் ரசிகர்களின் செயல் யாருக்கும் நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 13, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 13, மார்கழி 29 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

error: Content is protected !!