News February 6, 2025
புதுவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை பாகூர் முள்ளோடையில் தனியார் பள்ளிக்கு நேற்று (பிப்.5) மாலை வந்த இ-மெயிலில் பள்ளிக்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்த நிலையில், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் தகவல் புரளி என தெரிய வந்தது.
Similar News
News September 10, 2025
புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து ஆலோசனை

புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனுமதியில்லாமல், வளர்க்கப்படும் நாய்களை வளர்ப்போர் மீது அபராதம் நடவடிக்கை எடுப்பது, நகர மற்றும் கிராம பகுதியில் தெரு நாய்களை பெருக்கத்தை தடுக்க நகராட்சி மற்றும் கால்நடைதுறை மூலம் குழுக்கள் அமைத்து கருத்தடை செய்வது பற்றி ஆலோனை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 10, 2025
புதுச்சேரி: சட்டப்பேரவை உறுதிமொழி குழு முதல்வருடன் சந்திப்பு

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையின் உறுதிமொழி குழு உறுப்பினர்கள்
தலைவர் லைசம் சிமாய் MLA, உறுப்பினர் தலிம் தபோ MLA மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை செயலக அதிகாரிகள், குழு தலைவர் தபாங் தாகு மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருகை தந்து சபாநாயகர் செல்வம். ஆர் அவர்களையும், முதலமைச்சர் ரெங்கசாமி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
News September 9, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுவை உருளையான் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை, ஒதியன் சாலை போன்ற சில பகுதிகளில் குடிநீர் சம்பந்தமாக சில புகார்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் பொதுப்பணித்துறை, நீர் பாசனத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.